டெண்டர் குறித்த தகவல் இல்லை நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டகவுன்சிலர்கள்

டெண்டர் குறித்த தகவல் இல்லை நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டகவுன்சிலர்கள்
X
டெண்டர் குறித்த தகவல் இல்லை நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டகவுன்சிலர்கள்
விருதுநகர் நகராட்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற புதிய பேருந்து நிலையம் சம்மந்தமான டெண்டர் பற்றி நகராட்சி கவுன்சிலர்களுக்கோ பொது மக்களுக்கு எந்த வித தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் நகர் மன்ற தலைர் டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விருதுநகர் நகராட்சி மொத்தம் 36 வார்டுகளை கொண்டது. இந்த நகராட்சிக்கு உட்பட்ட விருதுநகர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தில் கடை அமைப்பது, இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இட ஒப்பந்தம் விடுவதற்கான டெண்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது ஓபன் டெண்டர் முறையில் நடைபெற்ற இந்த டென்டரில் திமுகவினர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன் அவர்கள் தரப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடை உட்பட ஏழு பிரிவுகளில் விடப்பட்ட டெண்டர்களில் கலந்து கொண்டவர்களுக்கு ஆதரவாக நகராட்சி ஆணையர் செயல்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு மட்டுமே டென்டரில் முன்னுரிமை வழங்கப்பட்டு கடைகள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அடுத்து டெண்டர் நடந்தது ஏன் முறையாக நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை ஆன்லைன் டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதையும் மீறி ஏன் ஓபன் டெண்டர் நடைபெற்றது என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர் . திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர்களும் தங்களுக்கு இந்த டெண்டர் குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனவும் உரிய அறிவிப்பு இன்றி நடைபெற்ற இந்த டென்டரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி நகர் மன்ற உறுப்பினர் மாதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதற்கு பதில் அளித்த திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் மாதவன் டெண்டர் நடைபெறுவது மட்டுமே தனக்குத் தெரியும் ஓபன் டெண்டெரா அல்லது ஆன்லைன் டெண்டரா என்பது குறித்து தனக்கு எந்தவித தகவலும் வரவில்லை என விளக்கம் அளித்தார் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது
Next Story