ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஏசி மின் கசிவால் மருந்து குடோனில் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஏசி மின் கசிவால் மருந்து குடோனில் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருந்து குடோனில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் மருந்துகள் தீயில் கருகி வீணானது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகளும், தினசரி சராசரியாக 1500 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இந்த அரசு மருத்துவமனையில் 18 மருத்துவர்கள், 30 செவிலியர்களும் பணிபுரிகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மாதம் 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு ரூ.6.89 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவு அருகே பழைய கட்டிடத்தில் மருந்து குடோன் உள்ளது. இங்கு மாத்திரைகள், ஊசி, அறுவை சிகிச்சை உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வித மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது. மருந்து குடோனில் உள்ள ஏசியில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் தீ தடுப்பான் மூலம் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கும் உள் நோயாளியாக இருக்கும் வார்டு பகுதிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் சேதம் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்த தீ விபத்தில் மருந்து மாத்திரைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

