விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வேளாண்மை துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம் அதனைத் தொடர்ந்து இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நற்பயர்களுக்கு இழப்பீட்டுத் தொகை விடுபட்டவர்களுக்கான இழப்பு உடனடியாக பெற்றுத் தர வலியுறுத்தியும், வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாட்டினை தவிர்க்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு உர மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளில் வேளாண்மை சார்ந்த பிரச்சனைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்தனர். மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அரசு துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
Next Story