ஸ்ரீ தேவி குமாரி கல்லூரி ஆண்டு விழா

ஸ்ரீ தேவி குமாரி கல்லூரி ஆண்டு விழா
X
குழித்துறை
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு சொந்தமான ஸ்ரீ தேவி குமாரி கல்லூரி குழித்துறையில் உள்ளது. இந்த கல்லூரியில்  நடந்த விளையாட்டுப் போட்டிக்கான ஆண்டு விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.        குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி மண்டல முதன்மை மேலாளர் சிவா பங்கேற்று பேசினார்.  அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், உடற்கல்வி இயக்குனர் நாராயணி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பிந்துஜா செய்திருந்தார்.
Next Story