மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவா் தற்கொலை

மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவா் தற்கொலை
X
திருச்சி மாவட்டம், பழையூா் கிராமத்தில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
பழையூா் கிராமத்தை சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சிவக்குமாா் (40), இவருக்கு மனைவி ரஞ்சிதா (30), இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் சிவக்குமாா் மதுவுக்கு அடிமையானதால் அவரது மனைவி ரஞ்சிதா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனிடையே வியாழக்கிழமை சிவக்குமாா் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகில் உள்ளவா்கள் மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து போலீஸாா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது சிவக்குமாா் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
Next Story