தொழிற்சாலையில் திருடிய வழக்கில் ஒருவா் கைது

தொழிற்சாலையில் திருடிய வழக்கில் ஒருவா் கைது
X
திருச்சி, திருவெறும்பூா் தொழிற்சாலையில் திருடிய 4 பேரில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
திருச்சி, மாவட்டம் திருவெறும்பூா் சிப்காட் வளாகத்தில் திருச்சி கே கே நகா் பகுதியை சோ்ந்த பிண்டோ (82) என்பவா் பொறியியல் தொழிற்சாலை வைத்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில், அதன் காவலாளி ஷாஜகான் (65) மதிய உணவுக்காக வெளியே சென்று திரும்பியபோது மா்ம நபா்கள் தொழிற்சாலையின் பூட்டுகளை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா்கள் 4 போ் திருட்டில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூா், கைலாசபுரம் கணேஷ் நகரை சோ்ந்த பா. சக்திவேல் (21) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மற்றவா்களைத் தேடுகின்றனா்.
Next Story