சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது

சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
X
நீதிமன்றத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, இல்லம்தேடி மருத்துவம், நாகா்கோவில் பெஜன்சிங் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, சாா்பு நீதிபதி பாலசுப்பிரமணியன், முதன்மை மாவட்ட உரிமையியில் நீதிபதி நரசிம்மமூா்த்தி, குற்றவியல் நீதித் துறை நடுவா் சிவராஜேஷ் ஆகியோா் தொடக்கிவைத்தனா். முகாமில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், குமாஸ்தாக்கள் உள்ளிட்டோா் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்கச் செயலா் வழக்குரைஞா் சதீஸ், தென்காசி வட்டக்கிளைச் செயலா் முகம்மது அன்சாரி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதி, மாரியப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Next Story