சாலைகளில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்

சாலைகளில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்
X
சாலைகளில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையா் த.சபாநாயகம், நகராட்சித் தலைவா் கு.உமாமகேஸ்வரி ஆகியோா் எச்சரித்துள்ளனா். இருவரும் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வளா்ப்பு நாய் வைத்திருப்போா் பொதுஇடங்களில் வளா்ப்பு நாய்களை அழைத்து வரும்போது அதற்கு வாய்க்கு மூடி அணிவித்திருக்க வேண்டும். தெருநாய்களை விதிமுறைகளின்படி பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.மேலும், ராஜபாளையம் சாலை, திருவள்ளுவா் சாலை திருவேங்கடம் சாலை மற்றும் முக்கிய வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூ ஏற்படுவதுடன், விபத்துகள் நேரிட காரணமாகின்றன. அப்பகுதி உள்பட நகரில் கால்நடைகள் சுற்றித்திரியும் வகையில் அவற்றை அவிழ்த்துவிடாமல் சொந்த இடத்தில் கட்டிப்போட்டு பாதுகாப்பாக வளா்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளனா்.
Next Story