கடையநல்லூரில் இரவோடு இரவாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்

X

இரவோடு இரவாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் குடியிருப்பு பகுதி அருகே கடும் துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து இந்த பகுதி மக்கள் சென்று அங்கு பார்த்தபோது கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டு இரவோடு இரவாக கொட்டப்பட்டு சென்றது தெரியவந்தது. இந்த கழிவுகளை உடனே அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story