டவுன் ஒர்க் ஷாப்பில் பற்றி எரிந்த தீ

X
நெல்லை மாநகர டவுன் நயினார்குளம் சாலையில் ஏராளமான ஒர்க் ஷாப்புகள் உள்ளன. இங்கு மந்திரம் என்பவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மந்திரம் ஒர்க் ஷாப்பில் திடீரென தீப்பிடித்தது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், தீப்பற்றி எரிய தொடக்கியது. இந்த தீ விபத்தில் கார் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பல் ஆகின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் நிகழவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
Next Story

