சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழா

X

பகவதி அம்மன் கோயில் கொடை விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் மற்றும் உச்சி மாகாளியம்மன் கோயில் கொடை விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மாலையில் உச்சி மாகாளியம்மன் ரத வீதி உலா நடைபெறும். சனிக்கிழமை இரவு ஸ்ரீபகவதி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெறும். இரவில் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை நடைபெறும். திங்கள்கிழமை மாலை தீா்த்தக்குடம், பால்குடம் ஊா்வலம் நடைபெறும். தொடா்ந்து சப்பர பவனி நடைபெறும். ஏப்.1ஆம் தேதி மாலை முளைப்பாரி மற்றும் தீச்சட்டி ஊா்வலம் நடைபெறும் . இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
Next Story