திமுக நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் ஆடியோ வைரல்

பல்லடம் திமுக நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் ஆடியோ வைரல் பரபரப்பு
ஒன்றைகோடி செலவு செய்து தலைவர் ஆகி உள்ளேன் சம்பாதிக்க வேண்டும்.. நாசுவன செருப்புல போடனும் என சாமலாபுரம் பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல். திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த விநாயகா பழனிச்சாமி இருந்து வருகிறார். இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இதில் சாமலாபுரம் 13 வார்டு உறுப்பினர் பெரியசாமி போனில் தொடர்பு கொண்டு தனக்கும் இதில் பங்கு வேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு விநாயகா பழனிச்சாமி 25000 பேரூராட்சி செயலாளருக்கு கொடுத்ததாகவும் மீதி தொகையை தான் எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒன்றரை கோடி செலவு செய்து நான் தலைவராகி உள்ளேன் நான் சம்பாதிக்க வேண்டும் எனவும் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் சம்பாதிச்சு நாலு காசு பார்க்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.வாங்கிய லஞ்ச பணத்தை நான் மட்டும் வைத்து கொள்ளவில்லை அனைவருக்கும் பங்கு கொடுக்கிறேன் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை (நாசுவனை) செருப்புல அடிங்க என பேசியுள்ளார்.இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திமுக பேரூராட்சி தலைவர் விநாயகம் பழனிச்சாமி சர்ச்சையாக பேசிய ஆடியோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story