வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியில் விவசாயி குணசேகரன் (62), அவரது மனைவி விஜயலட்சுமி (56) வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் விவசாய வேலைக்கு தோட்டத்திற்கு சென்று விட்டு விஜயலட்சுமி மட்டும் சமைப்பதற்காக வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகை, 40,000 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. உடனடியாக சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரித்து தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

