திருப்பத்தூர் நகராட்சியின் அவல நிலை!

குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் வெளியேறாததால் துர்நாற்றம் வீசும் அவல நிலை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதி அருகே பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான 15 ஆவது வார்டு பாரதிதாசன் நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அந்த பகுதியின் முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி பல மாதங்களாக குளம் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலையும் காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை தாண்டி செல்ல வேண்டிய அவல நிலையும் காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் துரை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் புகார் மனு கொடுத்தும் இன்று வருகிறேன் நாளை வருகிறேன் என்று மெத்தனமாக பதில் கூறிவிட்டு தற்பொழுது வரை அந்த இடத்தில் வெளியேறும் கழிவு நீரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Next Story