சிவகிரி அருகே வைக்கோல் கட்டுகளுக்கு தீவைப்பு: இளைஞா் கைது

X

வைக்கோல் கட்டுகளுக்கு தீவைப்பு: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி(72). பால் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவருக்கும் சிவகிரி காந்தாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த காந்தேஸ்வரன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் முனியசாமி பசுவிற்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது அங்கே வந்த காந்தேஸ்வரன் தகராறு செய்தாராம். மேலும், அங்கிருந்த 120 வைக்கோல் கட்டுகள் உள்ளிட்டவற்றை தீவைத்து எரித்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தேஸ்வரனை கைது செய்தனா்.
Next Story