வனத்துறை அறிவுரை

வனத்துறை அறிவுரை
X
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரம் கூட்டமாக மேயும் காட்டெருமைகள் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உட்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் காரணமாக வரட்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் வற்ற தொடங்கியுள்ளன. இதேபோல் மரம் செடி கொடிகள் காய்ந்து வருகின்றன. இதன் காரணமாக உணவு தண்ணீரை தேடி வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் தஞ்சம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையோரம் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக மேய்ந்து வருகின்றன. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Next Story