குழந்தை சாவு

X
பிகார் மாநிலம், கோப்ரி கிராமம், மொஹாலிஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் மிராஜ் அலோம் (27). இவரது மனைவி நிசின் கதூன் (22). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது, ஈரோடு, குமலன்குட்டை, செல்வம் நகரில் வசித்து வருகின்றனர். மிராஜ் அலோம் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார்.கடந்த 19ம் தேதி, இவர்களது 2-வது குழந்தை தெளகீர் (3), வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது. அதையறிந்த நிசின் கதூன் குழந்தையை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். பின்னர் உயர் சிகிச்சைக்காக ஈரோடு, அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை தெளகீர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

