சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு சிறை தண்டனை

X
சிவகங்கை மாவட்டம், புதுவயலைச் சேர்ந்தவர் சேகர் (61). பெயிண்டராக வேலை பார்க்கிறார். இவர் கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் சேகரை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு ஏழு வருடம் சிறை தண்டனையும், ரூ 2000 அபராதம் வித்து திர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்
Next Story

