லைத்தில்கதுர் இரவு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

தூத்துக்குடி ஆயிரம் மாதங்கள் பிரார்த்தனை செய்த பலன் தரும் லைத்தில்கதுர் இரவு பழமையான ஜாமியா பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் இதில் வரும் 27வது இரவு லைத்தில் கதுர் என இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது இந்த இரவு பள்ளிவாசல்களில் சென்று தொழுகை நடத்தினால் ஆயிரம் மாதங்கள் தொழுகை நடத்தியதற்கு பலன் கிடைக்கும் என்பது திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதை தெடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அத்தூல் அழிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். உலக நன்மை மற்றும் உலக அமைதி இயற்கை வளம் செழிக்க வேண்டி இமாம் சதக்கத்துல்லா, சிறப்பு (துவா) பிரார்த்தனை செய்தார். இதைத்தொடர்ந்து ரமலான் திராவியா தொழுகை நடத்திய இமாம் சம்சு, இமாம் சித்திக், இமாம் அக்பர் அலி, உள்ளிட்ட தலைவர் மிராசா இமாம் பாராட்டி சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.‌ இதைத்தொடர்ந்து ஜாமியா பள்ளிவாசலில் 30 நாட்களும் நோன்புக்காக சகர் உணவு அளித்த பாதுஷா சகர் கமிட்டி உறுப்பினர்களுக்கும் இப்தார் நிகழ்ச்சி நடத்திய இஃப்தார் கமிட்டி உறுப்பினர்களுக்கும் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராஷா சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், பாதுஷா சாகர் கமிட்டி நிறுவனத் தலைவர் நவரங் சகாப்தின் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூசா, கிராண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய நலச் சங்க தலைவர் ஏ கே மைதீன், திரேஸ்புரம் மிராசா, அமீர் பில்டிங் காண்ட்ராக்டர் காதர், H. M. மீராஷா, ஜாபீர், பீர்மைதீன், மீரான், A to Z கரீம், ஜாபர், ரசாக், medro ஷேக், ஸ்டார் மொபைல் முகமத் குட்டி, வழக்கறிஞர் அஜீஸ், நூர்தின் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை அர் ரஹ்மானியா நற்சேவை மையம், மற்றும் மேக் காம்ப்ளக்ஸ் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story