மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்பி முக்கிய கோரிக்கை

மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்பி முக்கிய கோரிக்கை
X
மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்பி முக்கிய கோரிக்கை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை - தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்கும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராஜேஷ்வரி ஸ்ரீகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயில் (எண்.20681/20682) தினசரி சேவை அறிமுகப்படுத்த வேண்டும். கோவை முதல் மதுரை வரை இயக்கப்படும் மதுரை இன்டர் சிட்டி விரைவு ரயிலை (வண்டி எண். 16721) செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். கொல்லம் விரைவு ரயிலுக்கு (வண்டி எண் 16101/16102) பாம்புகோவில் சந்தையில் நின்று செல்ல அனுமதி அளிக்க வேண்டும். தாம்பரம் செங்கோட்டை (வண்டி எண்.20683) செங்கோட்டை விரைவு ரயிலை கொல்லம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் பயணிகளின் பயன்பாட்டை ஈடுசெய்யும் வகையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் புதிதாக 5 மற்றும் 6 நடைமேடைகளை கட்டவும், ரேக்குகள் பராமரிப்புக்காக செங்கோட்டையில் ஒரு புதிய பிட்லைனை அமைக்கவும் வேண்டும். சோழபுரம், கரிவலம்வந்தநல்லூர் மற்றும் நயினாரகரம் (ஹால்ட்) ஆகிய இடங்களில் முன்னர் மூடப்பட்ட நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
Next Story