நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

X

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் நடன சபாபதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்திகலந்து கொண்டு பேசினார் அப்போதுதமிழகம் போராடும் தமிழகம் வெல்லும் என்ற வாசகங்களை சுவர் விளம்பரங்களாக எழுதி மக்களிடையே ஆட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் திமுக செய்துள்ள நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.அதிக அளவில் திமுகவினர் பங்கேற்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்கள் இடையே எடுத்துக் கூறி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கூறியதைப் போல தமிழகம் போராடும் தமிழகம் வெல்லும் என்ற வாசகத்தை சுவர் விளம்பரங்களாக எழுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,நாளை ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தொகை நூறு நாலு ஆயிரத்து 34 கோடி நிதியை வழங்காததை கண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன் நடக்க உள்ளகண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில்மாவட்டத் துணைச் செயலாளர் மயில்சாமி,மாநில மகளிர் அணி சமூக வலைதளப் பொறுப்பாளர் திருநங்கை ரியாமாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் பரமானந்தம் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் குமாரபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story