ராமநாதபுரம் நாட்டு நலப் பணித்திட்டம் கருத்தரங்கு நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24}ஆம் தேதி தொடங்கியது. வருகிற 30} ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறறது. இந்த முகாமில் மாணவர்களுக்கான சிறறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ. தர்மர் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் எஸ். சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மாமல்லன் வரவேற்றறார். சிறறப்பு விருந்தினராக ஸ்ரீபகவதி அறறக்கட்டளைத் தலைவரும், போஷன் அபியான் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளருமான மு. வெள்ளைப்பாண்டியன், "யூத் இந்தியா" என்றற தலைப்பில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும், "மாணவர்களின் சட்ட உரிமைகள்' என்ற தலைப்பிலும் பேசினார். இளம் தொழிலதிபர் எம்.ஆர்.பி. விக்னேஸ்வரன் இளம் தொழில் முனைவோர்கள் " ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற தலைப்பில் சிறறப்புரையாற்றினார். சமூக ஆர்வலர் விஜயன் "மக்கள் சேவையில் இளைஞர்கள்' என்ற தலைப்பில் பேசினார். முகாமில் 150} க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மைய வளாகம், கால்நடை மருத்துவமனை வளாகம் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. கஜேந்திரநாயகம் செய்திருந்தார். பேராசிரியை ரா. மேரிசுஜின் நன்றி கூறினார்.
Next Story

