ஆறுதல் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா
புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி ஆறுதல் கூறினார் . நீலகிரி மாவட்டம், உதகை கவர்னர்சோலை பகுதியில் நேற்று புலித்தாக்கி தோடர் பழங்குடியின விவசாயி கேன்டர்குட்டன் பரிதாபமாக உயிழந்தார். மேலும் இவரது கிராமத்திற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் நேரில் சென்று, இறந்தவரின் குடும்பதினரை சந்தித்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் இதில் இதில் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் வனத்துறை அலுவலர்கள் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.
Next Story



