கோவை: பணியிடங்களை நிரப்பக் கோரி தர்ணா போராட்டம் !

X

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை 100 சதவீதம் நிரப்ப வேண்டும், 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை-2 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் கோரி பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அனுப்பப்பட்ட கருத்துருவுக்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு அரசு பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருஞான சம்பந்தம் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், கண்ணப்பன், சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Next Story