ஜெயங்கொண்டம் அருகே தற்கொலை செய்து கொள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி மயங்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்.

X
அரியலூர், மார்ச்.28- அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் அருகே உள்ள காஞ்சிலி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகுடாபதி என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது இந்நிலையில் இன்று பிரச்சனைக்குரிய இடத்தை அளவீடு செய்த போது அண்ணாதுரையின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்ததாகவும் ஒருதலை பட்சமாக அளவீடு செய்ததாகவும் இது குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொள்வதாக. அப்பகுதியில் உள்ள 45 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி உள்ளார் வெயிலின் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலேயே மயங்கி கிடந்துள்ளார் இது குறித்து அண்ணாதுரையின் மகன் அரியலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றின் மூலம் தொட்டில் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மயங்கி கிடந்தவரை பத்திரமாக கீழே இறக்கி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

