ராமநாதபுரம் அரசு பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம்சாயல்குடி அருகேயுள்ள பொன்னகரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்ஸி தலைமை உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியை அமுதா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை ஜெயலட்சுமி பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார். கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்துவிளங்கிய மாணவ செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒய்வு பெற்ற உதவி ஆசிரியை திருமதி.தங்கத்தாய் அவர்கள் இந்த பள்ளியில் தான் பணியாற்றிய காலங்களை நினைவுகூர்ந்தும் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் தனது அனுபவ கருத்துக்களை அறிவுரையாக வழங்கினார். இந்த விழாவில் நரிப்பையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நாராயணன், கடலாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆத்தி, பொன்னகரம் கிராம தலைவர் பெருமான், நிர்வாகிகள் திருமணி பாண்டி, ராஜபாண்டி, முருகேசபாண்டி, பொருளாளர் கல்யாணராமன் மற்றும் அம்மன்புரம் கிராம தலைவர் உதயகுமார், நரிப்பையூர் காரணமறவர்கள் உறவின்முறை சங்க நிர்வாகி பழனிச்சாமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா நிறைவில் ஆசிரியை ரேவதி நன்றி கூரினார்.
Next Story

