ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
X
மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு நோய் தாக்கிய மிளகாய் செடியுடன் விவசாயி வேதனை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இந்த நிலையில் கமுதி முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் விவசாயம் செய்த விவசாயிகள் பருவம் தவறி பெய்த மழையால் முழு பயிறும் கருகி வீணாகி இருப்பதாகவும், மிளகாய் விவசாயம் மட்டும் சுமார் 1200 ஏக்கர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே அரசு சார்பில் காப்பீட்டுத் தொகை நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் எனவும் ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்திருந்த நிலையில் கடன்காரர்கள் தொல்லை தாங்க முடியாமல் வேதனைப்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் அரசுக்கு உரிய பரிந்துரை செய்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கமுதியை அடுத்த சிறகி கோட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்களை நோக்கி கருகிய மிளகாய் பயிரோடு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டதை எடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Next Story