பெயர் மாற்றம் செய்யப்பட்ட சர்க்கரை ஆலை முதல்வர் அதிரடி உத்தரவு.

X
NAMAKKAL KING 24X7 B |28 March 2025 5:39 PM ISTதமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று மோகனூரில் செயல்பட்டு வந்த சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரை மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று மோகனூரில் செயல்பட்டு வந்த சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரை மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (22.03.2025) 37.48 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட16.48 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 -25 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2025 மாதம் வரை நெல் 10,393 எக்டர், சிறுதானியங்கள் 87,441 எக்டர் பயறு வகைகள் 11,867 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 31,991 எக்டர், பருத்தி 1,808 எக்டர் மற்றும் கரும்பு 10,511 எக்டர் என மொத்தம் 1,54,012 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 598 எக்டர், கத்திரி 395 எக்டர், வெண்டை 339 எக்டர், மிளகாய் 247 எக்டர், மரவள்ளி 17,759 எக்டர், வெங்காயம் 4,601 எக்டர், மஞ்சள் 1,951 எக்டர் மற்றும் வாழை 2,614 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இன்றைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் / செயலாட்சியர் இரா.குப்புசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜி.அருளரசு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிமிடெட் இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ச.யசோதாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சாந்தி (நாமக்கல்), .சே.சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
