மனைவியை சுவற்றில் மோதி தாக்குதல்

X
மேல்புறம் அருகே உள்ள குழி விளையை சேர்ந்தவர் அனில் குமார். இவரது மனைவி ஷைனி (37). இந்த தம்பதிக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, தற்போது 13 மற்றும் 11 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அனில் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக ஷைனிக்கு சந்தேகம் ஏற்பட்டு, சண்டை ஏற்பட்டது. சம்பவத்தினம் இரவு சுமார் 8 மணியளவில் ஷைனி மற்றும் அனில்குமார் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, இதில் ஆத்திரம் அடைந்த அனில்குமார் மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் ஷைனிக்கு தலையில் பரத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் ஆத்திரம் அடங்காத அனில் குமார் சப்பாத்தி கட்டையால் சைனியை அடித்து உதைத்துள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த ஷைனி குழித்துறை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அனில் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

