தமிழகத்திற்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்

தமிழகத்திற்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ச்சியாக மூன்று மாத காலம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்படும் இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தமிழக அரசு ஆந்திர பொதுப்பணித்துறைக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்கி கிருஷ்ணா நதி நீர் கால்வாயை உரிய முறையில் சீரமைக்க உதவிட வேண்டுமென ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 24ஆம் தேதி வினாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா கிருஷ்ணா நதிநீர் 152 கிலோமீட்டர் கால்வாய் வழியாக கடந்து இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாய்ண்ட்டுக்கு வினாடிக்கு 60 கன அடி வந்தடைந்தது இதனை ஆந்திர தமிழக பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர் இன்று மாலைக்குள் 25 கிலோமீட்டர் கால்வாய் வழியாக பயணித்து கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தை அடையவுள்ளது நாளொன்றுக்கு வினாடிக்கு 300 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்துவிட தமிழக பொதுப்பணித்துறை கோரிக்கை வைத்துள்ள நிலையில் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரத்னா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் நாளை மாலைக்குள் வினாடிக்கு 300 கன அடி வரை தமிழக எல்லையை வந்து அடையும் வகையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது மூன்று மாதம் தொடர்ந்து தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் என்றும் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நான்கு டிஎம்சி தண்ணீரில் 1.5 tmc தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் மேலும் கண்டலேறு அணையில் 49 டிஎம்சி கொள்ளளவு இருப்பு நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது மக்கள் கவலை அடைய வேண்டாம் என்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டிக்கு சென்றடைந்து செம்பரம்பாக்கம் சோழவரம் புழல் ஏரியில் சேகரித்து சென்னைக்கு வழங்க ஏதுவாக இருக்கும் மேலும் சட்டவிரோதமாக கிருஷ்ணா கால்வாய் சேதப்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை ஆந்திரா மற்றும் தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்ற அவர் தமிழக அரசு ஆந்திர அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கி கிருஷ்ணா நதி நீர் கால்வாயை சீரமைக்க உதவிட வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்
Next Story