கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய முயன்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய முயன்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருவள்ளூர்- திருவள்ளூரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய முயன்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி கால்வாய் மூடியை திறந்தவுடன் அதிக நெடி வந்ததால் தீ வைத்து சோதனை செய்தபோது பற்றி எரிந்த கழிவுநீர் கால்வாய் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்து 950 குடியிருப்புகளில் 87 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அப்பகுதிமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன கடந்த சில தினங்களாக கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர், மக்கள் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் ஊழியர்களை வைத்து இரவு ஆய்வு செய்துள்ளது, அப்பொழுது திருவள்ளூர் டோல்கேட், -பெரியாகுப்பம் பகுதியில் உள்ள கழிவுநீர் மூடியை ஊழியர்கள் திறந்த போது அதிக நெடி வந்ததை கண்டுள்ளனர், சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் மூடி திறக்கப்பட்ட கழிவுநீர் கால்வாயில் பேப்பரில் தீ வைத்து செலுத்திய போது கழிவுநீர் கால்வாய் தீப்பிடித்து எரியத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிக நெடி வருவதை கண்ட ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story