இனயம் :வாலிபர் மீது தாக்குதல்

இனயம் :வாலிபர் மீது தாக்குதல்
X
3 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே இனயம் சின்னத்துறை  கடற்கரை கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி மகன் ஷாம் (21). மீன் பிடித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களான  கிஷோர் (23), ஜினு (21), சரண் ஆகியோர்களுக்குமிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனை ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ தினம் நடுத்தெரு என்ற பகுதியில் ஷாம் பைக்கில் செல்லும் போது கிஷோர், ஜினு, சரண் ஆகியோர் தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், பைக்கில் இருந்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ஷாம் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story