மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பிஜேபி சார்பில் கையெழுத்து இயக்கம்.

X

நல்லூர் கந்தம்பாளையத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பிஜேபி சார்பில் கையெழுத்து இயக்கம்.
பரமத்தி வேலூர்,மார்ச்.28: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா நல்லூர் கந்தம்பாளையத்தில் பிஜேபி சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ப.அருண் தலைமை வாங்கித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், கையெழுத்து இயக்க பொறுப்பாளர்கள் தனலட்சுமி, அன்னபூரணி,தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்துப் பெற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் கார்த்திக், செருக்கலை முருகேசன், கல்வியாளர் பிரிவு சண்முகம், நெசவாளர் பிரிவு தங்கதுரை, சக்கரபாணி மற்றும் நல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story