நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாமில் உற்சாகமாக பங்கேற்ற கல்லூரி மாணவர்கள்

கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்
திருவள்ளூர் அருகே ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன, அதன் மூலமாக அப்பகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப் பணிகளில் மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர், மேலும் கிராமத்தை சுற்றியுள்ள தூய்மையற்ற இடங்களை கண்டறியப்பட்டு அவைகளை தூய்மைப்படுத்தும் வேலையில் மாணவர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயலின் நிமித்தமாக அப்பகுதி பொதுமக்கள் மாணவர்களை வாழ்த்தி வருகின்றனர். மேலும் இம்முகாமில் பங்கு பெற்ற 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை வழி நடத்தும் விதமாக திட்ட அலுவலர்கள் டாக்டர் மணவாளன்,ராதா, ஆகியோரை நியமிக்கப்பட்டனர்.
Next Story