தூக்கில் அழுகிய நிலையில் தொழிலாளி

தூக்கில் அழுகிய நிலையில் தொழிலாளி
X
நாகர்கோவில்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி சேர்ந்தவர் கோகுல் (25). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி துளசி (20) கடந்த 11-03-  2025 அன்று கோகுல் திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.  இது  குறித்து காவல் நிலையத்தில் துளசி புகார் அளித்தார்.      போலீஸ் விசாரணையில் கோகுல் நண்பர் ஒருவர் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை அழைத்துக்கொண்டு மாயமானது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி நாகர்கோவில் வந்த கோகுல் தன்னுடன் வந்த பெண்ணுடன்  மீனாட்சிபுரம் பகுதியில்  ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர். இருவரும் தங்களை கணவன் மனைவி எனக் கூறியுள்ளனர்.      கோகுல் நாகர்கோவிலில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 23ம் தேதிக்கு பின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று 27ஆம் தேதி மதியம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டு உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கதவு உடைத்து பார்த்தபோது வீட்டுக்குள் கோகுல் பிணமாக உடல் அழகிய நிலையில் தொங்கினார்.        போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த டைரி மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் துளசியின் செல்போனுக்கு  காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.      அவர்  வந்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோகுல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் வந்த பெண் எங்கே என்பது தெரியவில்லை. இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோகுல் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story