ராஜராஜன் பள்ளியில் மாணவர்கள் படைப்பாற்றல் கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தில், மாணவர்களின் படைப்பாற்றல்கள் திறன் விழா நடைபெற்றது. ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் நீலகண்டன், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் வீரியன்கோட்டை ரமேஷ், சேதுபாவாசத்திரம் மதிமுக ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஊமத்தநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஜபார், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வீரியங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உடையநாடு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. வயது முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளும், பறவைகள், விலங்குகள் உருவத்தோடு அமைக்கப்பட்டிருந்தநுழைவு வாயில்களும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
Next Story




