நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

X

இலவச நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திருப்பத்தூர் மாவட்டம் கைபேசி மடிக்கணினி பயன்படுத்தாமல் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கண்டிப்பாக ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் திருப்பத்தூரில் துவங்கிய இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெற ஏதுவாக சிறப்பு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கியது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று ஆசிரியர்கள் வழிகாட்டின்படி கவனமுடன் படிக்க வேண்டும். தொலைக்காட்சி கைபேசி என கவனச் சிதறல் ஏற்பட்டு கண்களுக்கு அதிக சிரமத்தை தராமல் ஒரு நாளுக்கு ஏழு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறுவோம் மருத்துவர் படிப்பில் சேர வேண்டும் என்ற உந்துதலுடன் நன்றாக படிக்கும் படி ஊக்கமளித்து வாழ்த்து கூறினார்.. மேலும் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவு, சிற்றுண்டி , போதிய இடைவேளை, குடிநீர், வெயில் காலம் என்பதால் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஓ ஆர் எஸ் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இன்று முதல் மே மாதம் இரண்டாம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்புகள் இயற்பியல் ,வேதியியல் , தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா நான்கு முதுகலை அரசு பேராசிரியர்கள் பங்கு பெற்று மாணவர்களுக்கு பயிற்சி தர உள்ளனர் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி, துறை சார்ந்த அரசு அலுவலர்கள், அரசு பள்ளி பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.
Next Story