நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம்..

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம்..
X
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம்..
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் ராசிபுரத்தில் உள்ள சாந்தி இன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஓ.பி. பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.மோகன்ராஜ் , வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மற்றும் வன்னியர் சங்க செயலாளர். கார்த்தி கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த நாமக்கல் மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர் மற்றும் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி, கிழக்கு மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர் பசுமை தாயகத்தின் மாநில செயலாளர் வெங்கடாசலம், மற்றும் உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் பொன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கோலீஸ் பெரியசாமி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் , அ.வரதராஜ் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் (எ)தியாகராஜன், இராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர் இராசிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர், கோ. குணசேகரன் வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர், ம.மாரியப்பன் வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மு.கார்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க .அய்யாசாமி, மாநில வன்னியர் சங்க செயலாளர் நீ பா வெங்கடாசலம் மாநில பசுமை தாயக துணை செயலாளர் பொன்.ரமேஷ் மாநில உழவர் பேரிக்க துணைச் செயலாளர், ச.வடிவேலன் மாநில இளைஞர் சங்க செயலாளர் மற்றும் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மனோகரன்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர்.பி .கே பெருமாள் மற்றும்மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்களும் பாமக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை நிலவு மாநாட்டிற்கு சுமார் 10,000.க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார் எனவும், இதில் பேருந்து ,மினி பேருந்து, கார் என சுமார் 2000 வாகனங்களில் வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் தங்க அய்யாசாமி பேசும்போது மே 11ஆம் தேதி முழு சித்திரை நிலவு மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது. 12 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு கட்சியினர் அனைவரும் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்க வேண்டும். இந்த மாநாட்டை பார்த்து தமிழக முதல்வர் 10.5.% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அனைவரும் சிறப்பிக்க வேண்டும் எனவும் , மேலும் இந்த மாநாடு முடிந்தவுடன் அனைத்து கட்சியினரும் நமது பாமக நோக்கி வருவார்கள் எனவும் வருகின்ற 2026 நாம் எந்த கூட்டணியில் இடம்பெறுகிறோமோ அந்த கூட்டணி மட்டுமே வெற்றியடையும் எனவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள், மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் MP, அவர்களின் அறிவுரையின்படிம் இந்த கூட்டத்தின் நோக்கங்கள் பற்றியும் 10.5 /சதவீத இட ஒதுக்கீடு பெறுவது பற்றியும் எடுத்துக் கூறி அவர்களை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும், மேலும் கிராமங்கள் தோறும் துண்டறிக்கை, விளம்பர தட்டிகளும் வைக்கப்பட வேண்டும் , சுவர் விளம்பரங்கள் அதிகமாக செய்ய வேண்டும்,மேலும் ஒன்றியம் பேரூர் நகரப் பகுதிகளில் பொதுமக்களிடையே மாநாட்டிற்கான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும், 2,நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அதிகமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன மேலும் மண் குவாரிகளையும் அதிகளவில் வேட்டி எடுக்கப்பட்டு இரவோடு இரவாக கடத்தப்படுகின்றன இதனால் வனப்பகுதிகளும் இயற்கை வள பகுதிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்படுகின்ற கொள்ளையர்களையும் மண் கொள்ளையும், குண்டச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கபட வேண்டும் எனவும், தமிழக அரசு இதில் தலையிட்டும் அனுமதி பெறாத கனிமவளப் பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்து திருட்டுத்தனமாக வெட்டெடுக்கப்படும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும்,எனவும் இப்பொது குழு கேட்டுக்கொள்கிறது, 3, இராசிபுரம் அரசு மருத்துவமனை அருகிலும், நாமகிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட ஒரு சார்பதிவாளர் அலுவலகங்கள் அரசின் விதிமுறைக்கு ஏற்ப தரமான பொருட்களைக் கொண்டு கட்டப்படவில்லை ,கம்பிகள் ,ஜல்லிகள்,மண், எம்செண்ட் ,செங்கல், போன்றவை அரசின் உறுதிதன்மை கேட்ப பயன்படுத்தப்படவில்லை இந்த ஒப்பந்ததாரர் ஏற்கனவே பொதுப்பணி துறையால் தடை செய்யப்பட்டவர் இப்பொழுது இந்த கட்டிடங்களை எப்படி தரமாக கட்டுவார் என்பது புரியவில்லை எந்த நிலையில் இவருக்கு இந்த கட்டிடங்கள் எப்படி கொடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. எனவே அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், இந்த இரண்டு கட்டிடங்களையும் பார்வையிட்டு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,நல்ல தரமான பொருட்களைக் கொண்டு கட்டிடங்களை உறுதி தன்மையுடன் பல ஆண்டுகள் உறுதி தன்மையுடன் நிலைத்து நிற்க்கும் வண்ணம் கட்டப்பட வேண்டும் என்று பொதுக்குழு தமிழக அரசையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும் , பொதுமக்கள் சார்பாகவும், இப் பொதுகுழுகேட்டுக்கொள்கிறது, மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில். மாவட்ட செயலாளர் ஓ.பி. பொன்னுசாமி ,மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேல். மாநில மாணவர் அணி செயலாளர் பாலு, முன்னாள் மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன். மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் குணசேகரன், மங்களாபுரம் பாட்டாளி மக்கள் கட்சி, பேரூராட்சி உறுப்பினர் பெரியசாமி, ராசிபுரம் வாஞ்சிநாதன், அருள், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் இறுதியில் மாநில மாணவர் சங்க செயலாளர் தி.பாலு நன்றி கூறினார்.
Next Story