கைவினைப் பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

X

திருவாரூர் மாவட்டம் தனியார் திருமணங்கள் நடைபெற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் மாவட்ட அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்புக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்கினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்.
Next Story