மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..

X

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 291 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார். வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ரெகுநாதபுரம், கிளியூர், அவளிவநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் ரெகுநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
Next Story