குழந்தை திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகை உடன் மாவட்ட ஆட்சியர்..

X

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார். வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ரெகுநாதபுரம், கிளியூர், அவளிவநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் ரெகுநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இம்மு முகாமில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமணம் எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விளம்பர பதாகைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வெளியிட்டார்.
Next Story