இரவு பகலாக மண் ஏற்றி வரும் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதம்

இரவு பகலாக மண் ஏற்றி வரும் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதம்
X
ஆந்திராவிலிருந்து இரவு பகலாக தமிழகத்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக கிருஷ்ணா கால்வாய் மீது அதிகப்படியான பாரம் ஏற்றிக் கொண்டு வரும் மண் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதம்
ஆந்திராவிலிருந்து இரவு பகலாக தமிழகத்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக கிருஷ்ணா கால்வாய் மீது அதிகப்படியான பாரம் ஏற்றி கொண்டு வரும் மண் லாரிகளால் கிருஷ்ணா கால்வாய் சேதம் - கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் சுமார் 4 ஏக்கர் வாழை மரங்கள் மண் தூசிகள் நிறைந்து வாழைக்காய் வரும் நிலையில் இலை, மற்றும் மரம் கருகி நாசம் கண்ணீர் விடும் விவசாயிகள் லாரிகளை மறித்து போராட்டம். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட தாமரைக்குப்பம் தமிழக எல்லை பகுதி உள்ளது இதான் அருகாமையில் இருந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து மண் ஏற்றி வரும் ஆயிரக்கணக்கான லாரிகள், கிருஷ்ணா கால்வாய் மீது அம்பேத்கர்நகர் வழியாக சென்னை - திருப்பதி முக்கிய சாலையில் சாலையில் இணையும் நிலையில் கிருஷ்ணா கால்வாயில் வரும் அதிகப்படியான லாரிகளால் கால்வாய்க்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக கால்வாய் ஒட்டிய பகுதிகளில் அஷ்டலட்சுமி என்பவர் குத்தகைக்கு 4 ஏக்கர் அளவில் நிலம் எடுத்து அதில் வாழைமரம் வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த மண் லாரிகளால் கண்ணீர் மட்டுமே மிஞ்சி உள்ளது.. கால்வாய் மீது மண் ஏற்றி கொண்டு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அதிலிருந்து வெளியாகும் மண் துகள்கள் வாழை மரம் இலைகள் மீது படர்ந்து வாழையிலை வீணாகி கரு கருத்து போய் உள்ளது, அதேபோன்று வாழைக்குலை வரும் நேரத்தில் இது போன்ற நடைபெற்றதால் குருத்தில் இருந்து வந்த பிஞ்சு வாழையும் காய்ந்து போக விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதுகுறித்து அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், கால்வாய் மீது மண் லாரி செல்லக்கூடாது என ஒரு உத்தரவு இருக்கும் நிலையில், கிருஷ்ணா கால்வாய் மீது மண் லாரிகளை செல்ல திருவள்ளூர் நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர.. அல்லது சட்டத்துக்கு புறம்பாக மண் அல்லி செல்லும் வாகனங்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் சுமார் 4 குத்தகைக்காரர்கள் மண்குவாரி மண்ணை எடுத்துக் கொண்டு கால்வாய் மீது வரும் நிலையில் அவர்கள் அனைவருக்கும் மண் எடுத்து செல்ல அனுமதி நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்தார்களா என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக அதிகப்படியான லாரிகள் 24 மணி நேரமும் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மீது மண் அள்ளி வரும் நிலையில் இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story