பேரிகை அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.

X

பேரிகை அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள அத்திமுகத்தை சேர்ந் தவர் பாலாஜி விவசாயி. இவரது மனைவி கிருத்திகா (20) இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த கிருத்திகா நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கினார். இதை கண்ட அவரை உறவினர்கள் அவரை மீட்டு ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story