ஓசூர்: இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு விழா.

X

ஓசூர்: இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு நேற்று விழா நடந்தது. அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர் டாக்டர் லாசியா தம்பிதுரை கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவிற்கு, தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். புதிய கிளையின் மேலாளர் ஐஸ்வர்யா வரவேற்றார். கோவையிலிருந்து, காணொலி காட்சி மூலம் வங்கியின் கள பொது மேலாளர் சுதா ராணி வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story