முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு நகர திமுக சார்பில்தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேர் நிலைஅருகே நடைபெற்றது.நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.நகர துணை செயலாளர் டி எஸ் தேவராஜன் அனைவரையும் வரவேற்றார்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி,திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன்மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்திருநங்கை ரியா திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பேசினார்அப்போது பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஆட்சி முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி கட்டக்கத்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் சூரியனைப் பார்த்து குறைக்கிற ஜந்துவைப்போல் குரைக்கிறர்களுக்குநாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை 2026 சட்டமன்றத் தேர்தலில் வீட்டில் பூச்சிகளாய் கருகி போவார்கள் பெண்ணுக்கு சம உரிமை தந்த உடலில் சரி பாதி தந்த அர்த்தனாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள பகுதி பெண்ணுக்கு சம உரிமை தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர் 38 மாவட்டங்களில் 22 மாவட்ட ஆட்சியர்கள் பெண்களாக உள்ளனர் 11 பெண் நேயர்களை கொண்ட நிர்வாகம் உள்ளது திமுக ஆட்சியில் தான்.பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பது பெண்கள் தான் அழகு சுமங்கலி தன்மை தாய்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் பெண்கள் தான் அழகு நிரந்தரமல்ல சுமங்கலி தன்மை என்பதும் நிரந்தரமானதல்ல ஆனால் தாய்மை என்பது ஒரு வரம் இதையெல்லாம் கடந்து பெண்களுக்கு பெருமை தருவது படிப்பு தான் ஜாதகம் நிரந்தரமான மகிழ்ச்சி நகை அணிந்து இருந்தால் திருடர்களுக்கு பயப்பட வேண்டும் நம் படிப்பு பொறுப்பு தருவது யாராலும் திருட முடியாது முக்கியமானதாகும் இதனை உணர்ந்துதான் புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி வழக்கமாக படிக்கும் பெண்களை விட மூடர்களுக்கும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்க வழி வகுத்தவர் தமிழ்நாடு முதல்வர் ஆவார் அப்படி பெண்கள் வளர்ந்து விடக் கூடாது என கருதி தான் ஒன்றிய அரசு தமிழ்நாடு கல்வித்துறைக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது எடப்பாடி பழனிச்சாமி பொருத்தவரை தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் 54 கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திறன் கொண்டவர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் 1971இல் 543 பாராளுமன்ற உறுப்பினர்கள் என கணக்கிடப்பட்டது மக்கள் தொகை அதிகமாகவதால் அரசின் திட்டங்கள் சென்று சேர முடியவில்லை என்பதால் மக்கள் தொகை கட்டுப்பாடு க்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தபோது அதற்கு கட்டுப்பட்டு நடந்து கொண்ட தமிழ்நாட்டின் தற்போதைய ஜனத்தொகை 7 கோடியே 16 லட்சம் ஆனால் உத்தரப்பிரதேசத்தின் ஜனத்தொகை 23 கோடியே 56 லட்சம் பிகாரின் ஜனத்தொகை 16 கோடியே 63 லட்சம் இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கெடுத்து பாராளுமன்ற தொகுதிகளை நினையும் நியமித்தால் நமக்கு 32 பாராளுமன்ற தொகுதிகள் தான் வரும் ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 118 எம்பி தொகுதிகள் வரும் தமிழகத்தின் அளவை குறைக்க கூடாது மற்றவர்களுக்கு உயர்த்தினால் தமிழகத்திற்கும் உயர்த்த வேண்டும் என நெஞ்சுலத்துடன் வாதாடியவர் இதற்கு எதிராக குரல் கொடுத்தவர்தான் நமது தகவலாக முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிக் கொள்கை ஏற்க முடியாது இரு மொழி கொள்கைதான் தமிழகத்தின் கொள்கை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்அதிமுகவினர் அவர்களின் கட்சித் தலைவியை அன்பால் அம்மா என அழைத்தனர் தந்தை பெரியார் என அழைத்தனர் உடன் பிறந்தவர் என நினைத்து தான் அண்ணாவை அழைத்தனர் அதுபோல் தாயுமானவராக திகழும் தமிழக முதல்வரை அப்பா என்று அழைக்கும் நிலை தான் இன்று இருக்கிறது அம்மா பிரச்சனை வரும்போது துன்பத்தில் இருக்கும்போது நாம் சொல்கிற சொல் பிரச்சனை தீருகிறபோது துன்பங்கள் மாறுகிறபோது சொல்கிற சொல் அப்பா தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்த்துஅப்பா என்று அழைக்கும் அனைத்து தகுதிகளையும் பெற்றவர் தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின். மீண்டும் 2026 இல்ஆட்சி அமைத்து ஆகஸ்ட் 15 கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் வாய்ப்பை பெறப்போகிறவரும் அவர்தான் எனக் கூறினார் நிகழ்ச்சியில்மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மாவட்ட துணைச் செயலாளர் மயில்சாமி ஒன்றிய செயலாளர் மற்றும் தங்கவேல் முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story