அரூர் விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் அமோகம்

அரூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் 7.46 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கச்சேரிமேட்டில் தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அரூர், மொரப்பூர்,கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.மேலும் நேற்று 105 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்த நிலையில் மஞ்சள் விராலி ரகம் ஒரு குவிண்டால்10,999 ரூபாய் முதல் 13,899 வரை ஏலம் போனது. குண்டு மஞ்சள் குவிண்டால் 10,521 முதல் 12,329 வரை விற்பனையானது மேலும் நேற்றைய காலத்தில் 7,46,350 ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் போனது
Next Story