ராமநாதபுரம் சமத்துவ இப்தார் நோன்பு நடைபெற்றது

ராமநாதபுரம் சமத்துவ   இப்தார்  நோன்பு நடைபெற்றது
X
முதுகுளத்தூர் அருகே அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக மத்தியம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளரும், முன்னாள் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில், ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் காக்கூர் கிராமத்தில் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு கஞ்சி, பழங்கள், பேரிச்சம்பழம், பழச்சாறுகள், இனிப்பு, கார வகைகள் வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுடன் இணைந்து அதிமுகவினர் உணவு அருந்தினர். இதில் ஒன்றிய அவைத் தலைவர் விளங்குளத்தூர் கோ.முத்து மணி, ஒன்றிய துணைச் செயலாளர் வெ.முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் காக்கூர் கருமலையான், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், மருதகம் தருமர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜசேகர், கிளைக் கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story