பொள்ளாச்சி: கடையின் கல்லாப்பெட்டியில் திருடியவர் கைது !

பொள்ளாச்சி: கடையின் கல்லாப்பெட்டியில் திருடியவர் கைது !
X
முருகசாமி என்பவரின் கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர் கைது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் முருகசாமி என்பவர் தனியார் உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 24.03.2025 அன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுதினம் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து 1,90,000 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்யபட்டதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) தான் திருட்டில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை நேற்று கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Next Story