ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டு கட்டாக கைது

X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குறைத்து கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் அயிலைசிவசூரியன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பஞ்சாபில் பேச்சுவார்த்தைக்கு சென்று விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளைப் விடுதலை செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதை கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து விவசாயிகள் ஆட்சி அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதன் காரணமாக காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக கைது செய்து தூக்கிச் சென்று வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
Next Story