ராமநாதபுரம் மத நல்லிணக்க இப் தார் நிகழ்ச்சிநடைபெற்றது

ராமநாதபுரம் மத நல்லிணக்க இப் தார் நிகழ்ச்சிநடைபெற்றது
X
திருவாடானை தாலுகா நம்புதாளையில் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் மேற்குத்தெரு, கிழக்குத்தெரு ஜமாத் இணைந்து சமூக நல்லிணக்க இப் தார் நிகழ்ச்சியை நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் மேற்குத்தெரு, கிழக்குத்தெரு ஜமாத் இணைந்து சமூக நல்லிணக்க இப் தார் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு களப்பத் சகுபர் தலைமை தாங்கினார். அனைவரையும் தொண்டி நகர் தலைவர் நாசர் வரவேற் றார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆணிமுத்து, ஜமாத் தலைவர்கள் பக்கீர், சேகு மரைக்கா யர், மாவட்ட தலைவர் ரியாஸ் கான், பொதுச்செயலாளர் முகமது சுலைமான், மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஜமாத் நிர்வாகிகள், நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகு தியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், கிராம மக்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story